covid_icon

COVID-19: What you need to know

"Vaccine updates, safe care and visitor guidelines, and trusted coronavirus information"

உணவுக்குழாய் சுமார் 25 செ.மீ., நீளம் உடையது. இது உங்கள் தொண்டையிலிருந்து உங்கள் வயிற்றுக்கு ஓடும் நீண்ட வெற்றுக் குழாயாகும். உங்கள் உணவுக்குழாய் நீங்கள் விழுங்கிய உணவை உங்கள் தொண்டையின் பின்புறத்திலிருந்து உங்கள் வயிற்றுக்கு
ஜீரணிக்க உதவுகிறது. உணவுக்குழாய் புற்றுநோய் (Esophageal cancer) பொதுவாக உணவுக்குழாயின் உட்புறத்தை வரிசைப்படுத்து ம் உயிரணுக்களில்
தொடங்குகிறது.

உணவுக்குழாய் புற்றுநோயின் அறிகுறிகள்?

  • உணவுகளை விழுங்குவதில் சிரமம்
  • காரணமே இல்லாமல் எடை இழப்பு
  • மார்பு பகுதியில் எரிச்சல் மற்றும் அழுத்தம்
  • அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல்
  • கடுமையான இருமல்

என்ன காரணத்தால் ஏற்படுகிறது?

உணவுக்குழாயின் உயிரணுக்களில் எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள்…

  • இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய்
  • புகைப்பிடித்தல்
  • உணவுக்குழாயின் உயிரணுக்களில் (பாரெட்டின்உணவுக்குழாய் ) முன்கூட்டிய மாற்றங்களைக் கொண்டிருத்தல்.
  • உடல் பருமனாக இருப்பது
  • மது அருந்துவது
  • உணவுக்குழாயின் தொடர்ச்சியான செயல்பாட்டால் ஏற்படும் அச்சலாசியா
  • போதுமான காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடாமல் இருப்பது

உணவுக்குழாய் புற்றுநோய் இரண்டு வகைப்படும்.

  • அடினோகார்சினோமா
  • ஸ்குவாமஸ் செல்கார்சினோமா

எப்படி பாதுகாப்பாக இருப்பது?

  • உணவுக்குழாய் புற்றுநோய் வராமல் தடுக்க முதலில் செய்ய வேண்டியது புகைப்பிடித்தலை நிறுத்த வேண்டும்.
  • புகைப்பிடிக்காதவர்கள் அதனைத் தொடங்காமல் இருப்பது நல்லது.
  • மது அருந்தும் பழக்கமுள்ளவர்கள் அதனை மிதமான அளவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • உணவில் அதிகளவு காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள் .
  • முக்கியமாக உடல் எடையை ப் பராமரிக்க வேண்டும். உடல் பருமன்தான் உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கியக் காரணமாகும்.

உணவுக்குழாயின் நீண்டகால எரிச்சல் உணவுக்குழாய்
புற்றுநோயை ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு
பங்களிக்கக் கூடும் என்று
கருதப்படுகிறது
!!

கர்ப்பப்பையின் உள்சவ்விலிருந்து வரும் புற்றுநோயே ‘என்டடோமெட்ரியல் கேன்சர் ‘ – அதாவது கர்ப்பப்பை புற்றுநோய் எனப்படுகிறது.உலகளவில் பெண்களுக்கு ஏற்படும்
புற்றுநோய்களில் கர்ப்பப்பை புற்றுநோய் நான்காம் இடத்தில் இருக்கிறது.கரப்பப்பையின் உட்சுவரானது ‘எண்டோமெட்ரியம்’ எனப்படும். இந்த செல்கள் அளவுக்கு அதிகமாக, கட்டுப்படுத்த இயலாத நிலையில் அதிகரிக்கும்போ து கர்ப்பப்பை புற்றுநோய்
உருவாகிறது.

அறிகுறிகள் என்னென்ன?

  • மாதவிலக்கு நின்ற பிறகும் ஏற்படும் உதிரப்போக்கு (Post menopausal bleeding)
  • மாதவிலக்கு நாட்களில் அளவுக்கு அதிகமான உதிரப்போக்கு ஏற்படுதல் (Abnormal uterine bleeding)
  • மாதவிலக்கு அல்லா த நாட்களிலும் உதிரப்போக்கு ஏற்படுதல் (Non cyclical spotting bleeding)

    பரிசோதனை முறைகள் எவை?

    • அல்ட்ரா சவுண்டு ஸ்கே ன் (Ultrasound)
    • ட்ரான்ஸ் வெஜைனல் ஸ்கேன் (Trans vaginal USG scan)
    • எம்.ஆர்.ஐ. ஸ்கேன் (MRI scan)
    • கர்ப்பப்பை உள்சவ்வு திசு பரிசோதனை (Endometrial biopsy)

    அபாயக்காரணிகள் என்னென்ன?

    • கர்ப்பப்பை உள் சவ் வு தடிமனாக இருத்தல் (Thickened endometrium/endometrial hyperplasia)
    • மிகச்சிறிய வயதிலேயே பூப்படைதல் (10 வயதுக்கு முன்னதாகவே )
    • 52 வயது தாண்டியும் தொடர்ச்சியாக மாத விலக்கு ஏற்படுதல்
    • மரபணு மாற்றங்கள், உடல் பருமன்
    • குழந்தையின்மை
    • ரத்தக் கொதிப்பு, நீரிழிவு உள்ளவர்கள்
    • பூப்படைந்த முதலிருந்தே தொடர்ச்சியாக பல வருடங்கள் மாதவிலக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே ஏற்படுதல் (Chronic anovulation)

    புற்றுநோயின் நிலைகள் :

    Stages of Cancer
    • Stage 1 (முதல்நிலை )
      • கர்ப்பப்பையில் மட்டும் புற்றுநோய் செல்கள் இருத்தல்
      • அறுவை சிகிச்சை மட்டுமே போதுமானது
    • Stage 2 (இரண்டாம்நிலை )
      • கர்ப்பப்பை வாய்ப்பகுதியிலும் பரவியிருத்தல்
      • அறுவை சிகிச்சை செய்த பிறகு கதிர்வீச்சு / கீமோதெரபி கொடுக்கப்படும்.
    • Stage 3 (மூன்றாம் நிலை )
      • யோனி பாகம், சினைப்பை மற்றும் நெறிகட் டிகளில் பரவியிருத்தல்
      • கதிர்வீச்சு/கீமோதெரபி கொடுத்து, பிறகு அறுவை சிகிச்சையும் , மீண்டும் கதிர்வீச்சு / கீமோதெரபி கொடுக்கப்படும்.
    • Stage 4 (நான்காம் நிலை )
      • சிறுநீர்ப்பை , மலக்குடல், நுரையீரல், எலும்பு போன்ற உடலின் அனைத்து முக்கிய பாகங்களிலும் பரவுதல்
      • கதிர்வீச்சு / கீமோதெரபி மட்டுமே கொடுக்கப்படும்.

    ஆரம்ப கட்டத்திலேயே பிரச்சனைகளைக்
    கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை பெற்று கொள்ளவது மிகவும் அவசியம்
    !!!!!!

    கணையம் என்றால் என்ன?

    கணையம் நமது வயிற்றுப் பகுதியின் அடியில் பின்புறமாக இருக்கிறது. கணையம் முக்கியமாக இரண்டு வேலைகளை செய்கிறது. முதல் வேலை இன்சுலின் சுரப்பு. இன்சுலின்தான் உடலில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது. கணையத்தின் இரண்டாவது முக்கியமான வேலை ஜீரணத்திற்கு உதவக்கூடிய
    நொதியைச் (என்ஸைம்ஸ்) சுரப்பது. அதுவே நாம் சாப்பிடக்கூடிய உணவில் கலந்து நமது ஜீரணத்துக்கு உதவுகிறது.

    முக்கியமான இந்த இரண்டு வேலைகளைச் செய்யக் கூடிய கணையத்தில் நோய் ஏற்பட இரண்டு முக்கியக் காரணங்கள் :

    1. மதுப்பழக்கம் (மது அருந்துவதால் கணையம் அலர்ஜியாகிக் கெட்டுப் போவதற்கான அபாயம் இருக்கிறது).
    2. பித்தப்பையில் ஏற்படக்கூடிய கற்கள் கணையத்தை அடைத்து, அதனால் பிரச்சனை வரலாம்.

    அறிகுறிகள் என்னென்ன?

    • பசியின்மை
    • மஞ்சள் காமாலை
    • உடல் எடை குறைதல்
    • புதிதாக சர்க்கரை நோய் வருபவர்களுக்கு
    • சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு அது இன்னும் அதிகமாகி இன்சுலின் போடுகிற அளவுக்கு வளர்ந்து நிற்பது.

    கணையப் புற்றுநோயை தடுக்கும் முறைகள் :

    அதைத் தடுக்கும் முறைகளான மதுப்பழக்கம், புகைப்பழக்கத்தைத் தவிர்ப்பதை தொடர்ந்து செய்ய வேண்டும். அதோடு, ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, பித்தப்பை கற்கள் போன்றவை வராமல் தடுத்தால் கணையத்தில் வரக்கூடிய புற்றுநோய்களைத் தவிர்க்கலாம். மஞ்சள் காமாலை போன்ற சில அறிகுறிகள்தோன்றும் பட்சத்தில் அது கணையப் புற்றுநோயாக இருக்குமோ என்ற சந்தேகத்தைத் தெளிவுபடுத்துவது மிகவும் அவசியம்.

    கணையப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நமக்கு
    மிக மிக அவசியம்.

    கல்லீரல் நீர்க்கட்டிகள் என்பது உங்கள் கல்லீரலில் தோன்றும் திரவத்தால் நிரப்பப்பட்ட பைகள். கிட்டத்தட்ட பெரும்பாலான கல்லீரல் நீர்க்கட்டிகள் தீங்கற்றவவையே . அதாவது புற்றுநோய் அல்லாதவை. சில நீர்க்கட்டிகள் அறிகுறிகளை ஏற்படுத்தும் அளவுக்கு பெரிதாக வளரும். சில கல்லீரல் நீர்க்கட்டிகள் மரபுவழிக் கோளாறால் ஏற்படுகின்றன. பெரும்பாலானவற்றுக்கு மருந்துகளை மட்டுமே பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகின்றன. கல்லீரல் நீர்க்கட்டிகளில் 1 முதல் 5 சதவிகிதம் வரை மட்டுமே பு ற் றுநோய் சார்ந்தவை . அவற்றில் 30 சதவிகித நீர்க்கட்டிகள் அறிகுறியை அளிக்கும் அல்லது புற்றுநோயாக மாறும் அபாயம் இருக்கிறது.

    கல்லீரல் நீர்க்கட்டிகள் எதனால் ஏற்படுகின்றன ?

    பெரும்பாலான கல்லீரல் நீர்க்கட்டிகள் பிறவியிலேயே உ ள்ளன . அதாவது அவை பிறக்கும்போதே உருவாகிவிடுகின்றன. பிறவி கல்லீரல் நீர்க்கட்டிகளுக்கு என்ன காரணம் என்று இதுவரை அறியப்படவில்லை .

    வகைகள் :

    1. ஹைடாடிட் நோய் (எக்கினோகாக்கால் அல்லது ஹைடாடிட் நீர்க்க ட்டிகள்)
    2. எளிய கல்லீரல் நீர்க்கட்டி (எஸ்எல்சி)/பாலிசிஸ்டிக்கல்லீரல் நோய் (பிஎல்டி)

    கல்லீரல் நீர்க்கட்டியின் அறிகுறிகள் என்ன?

    • வயிற்றின் மேல் வலது பகுதியில் மந்தமான வலி.
    • வீங்கிய அல்லது விரிந்த வயிறு.
    • குமட்டல் மற்றும் வாந்தி.
    • பசியின்மை அல்லது மிகக்குறைந்த உணவை உண்ட பிறகு நிரம்பிய உணர்வு.
    • மூச்சுத் திணறல் உணர்வு.
    • வயிற்றில் பெரிய கட்டிகளை உணர முடிதல் .
    • மஞ்சள் காமாலை . கல்லீரல் நீர்க்கட்டிகள் உங்கள் பித்த நாளங்களை அடைத்தால் இது நிகழலாம்.
    • காய்ச்சல் மற்றும் கடுமையான வயிற்று வலி… ஒரு நீர்க்கட்டி சிதைந்துபோனால் இது நிகழலாம்.

    கல்லீரல் நீர்க்கட்டிகளை எப்படி கண்டறிகின்றனர் ?

    • அல்ட்ராசவுண்ட்
    • CT ஸ்கேன் (CT Scan)
    • காந்த அதிர்வு இமேஜிங் (எம்ஆர்ஐ)

    பெரும்பாலான கல்லீரல் நீர்க்கட்டிகள் தீங்கற்றவையே .
    அவை உங்கள் வாழ்க்கைத் தரத்தைப்பாதிக்கக்கூடிய
    அறிகுறிகளை அரிதாகவே ஏற்படுத்துகின்றன.

    GERD Symptoms and Treatment

    Cure means healing or restoring to health. Cure is applied to the eradication of disease or sickness. When a disease is cured, the symptoms don’t return once the treatment is removed. Curing a disease happens when its cause is eliminated. This of course is not the case with drugs for heartburn and GERD. As soon as the patient stops taking them, the symptoms return. And often they’re worse than they were before the patient started the drug

    Now, before going to see how GERD can be cured, we must know some facts about the GERD per se.

    If you ask any average person on the street what causes heartburn, he’ll tell you “too much acid in stomach