Benefits of Grains !!!

நமது உடல்நிலையானது நல்ல நிலையில் இருக்கத் தேவையான அளவு தாது உப்புக்கள், இரும்புச்சத்து, வைட்ட மின்கள், சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ் , கால்சியம்
சத்துக்கள் போன்றவை சிறுதானியங்களில் நிறைந்துள்ளன.

தானியங்களின் நன்மைகள்!

  • சிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இவை குடல் புற்றுநோய் வளரும் அபாயத்தை க் குறைக்கின்றன.
  • சிறுதானியங்களில் உள்ள வைட்டமின் ‘பி’ ஆனது கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பினைக் கிரகித்து அதனை ஆற்றலாக மாற்றுகின்றன.
  • இதயத்தமனிகளில் உள்ள உட்சுவரினைத் தளர்த்துவதற்குச் சிறுதானியங்களில் உள்ள மெக்னீசியம் பயன்படுகிறது. இவ்வாறு தமனியின் உட்சுவர் தளர்வதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
  • சிறுதானியங்களில் உள்ள லெசித்தின் மற்றும் மீத்தியோனின் கல்லீரலிலிருந்து தேவையற்ற கொழுப்பை வெளியேற்ற உதவுகின்றன.
  • சிறுதானியங்கள் அதிக புரதச்சத்து கொண்ட தானியங்களாகவும், அமினோ அமிலங்களில் ஒன்றான லைசினையும் கொண்டுள்ளன.
  • சிறுதானியங்களில் குறைந்த கிளைசிமிக் குறியீடு இருப்பதால் செரிமானம் மெதுவாக நடைபெறுகிறது.

தானியத்தில் செய்யப்படும் சில உணவு வகைகள் ?

  • ராகி காபி
  • தினை அதிரசம்
  • ராகி போளி
  • பனிவரகு மசாலா புட்டு
  • சாமை இனிப்பு புட்டு
  • குதிரை வாலி கேசரி

இவ்வளவு சிறப்பு வாய்ந்த சிறுதானியங்களைத்
தினமும் உண்டு ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம்
!!!