Can’t able to control eating? Swallow this balloon !!!

விரைவாகவும் எளிமையாகவும் உடல் எடையைக் குறைக்க வேண்டும். ஆனால் உலகில் எதையுமே அவ்வளவு எளிதாகச் செய்ய முடியாது; எல்லாவற்றிற்கும் ஏதேனும் ஒரு கடின முயற்சி தேவை. எனவே நாம் செய்யும் கடினமான முயற்சிகளில் பயனளிக்கக்கூடிய வகையில் எது விரைவாகவும் எளிமையாகவும் செய்யக்கூடியதாக இருக்கிறதோ அதுவே புரட்சிகரமான செயல்பாடு. அப்படியான ஒரு சாத்தியத்தைத் தரக்கூடியதே Swallowable Capsule Balloon.

Swallowable Capsule Balloon என்றால் என்ன ?

பலூன் என்றவுடன் நமக்குப் பல்வேறு வண்ணங்களில் இருக்கும் பலூன்களே நினைவிற்கு வரும். அந்த பலூன்களில் காற்று இருக்கும். ஆனால் இதில் குறிப்பிட்ட சிறப்புக்கூறுகளைக் கொண்ட திரவம் இருக்கும். சிகிச்சை நெறிமுறையில் இந்த பலூன் சிகிச்சை முறைபல வருடங்களாகவே நடைமுறையில் உள்ளது. ஒரு எண்டோஸ்கோபி கருவி மூலமாக எண்டோஸ்கோபியை உள்ளே பொருத்தி அந்த பலூனை உள்ளே போட்டு, அதில் சில திரவங்களை வைத்து பலூனைப் பெரிதுபடுத்திவிட்டால், வயிற்றில் ஒரு பெ ரும் பகுதியை அது ஆக்கிரமித்துக் கொள்ளும்.

நாமே நினைத்தாலும், ஆசைப்பட்டாலும், பிடித்த உணவுகளை உட்கொண்டாலும் ஒரு அளவுக்கு மேல் நம்மால் உண்ண முடியாது. இந்த பலூன்களைச் சில மாதங்களோ அல்லது வருடங்களளோ கழித்து அகற்றிவிடலாம். தேவைப்பட்டால் இன்னொரு பலூனையும் உள்ளே சேர்த்துக் கொள்ளலாம்.

Swallowable Capsule Balloon ஒரு புரட்சிகரமானது ?

  • எண்டோஸ்கோபி, மயக்க மருந்து போன்ற எதுவுமே தேவையில்லாமல், ஒரு சிறிய கேப்சூல் போன்று ஒயரோடு ஒட்டியிருக்கும். அதை விழுங்கியவுடன் வயிற்றுக்குள் சென்றுவிடும்.
  • மூன்று அல்லது நான்கு மாதங்களில் அந்த பலூன் தானாகவே சிதைந்து மலத்துடன் கலந்து சிறுசிறு துண்டுகளாக வெளியே வந்துவிடும்
  • அந்தக் கருவியைப் பொருத்துவதற்கு அறுவை சிகிச்சையோ , மயக்க மருந்தோ , எண்டோஸ்கோபியோ எதுவுமே தேவையில்லை . 1 0 – 1 5 நிமிடத்திற்குள் புறநோயாளிகள் பிரிவில் உட்கார்ந்து விழுங்கிவிட்டு, வீட்டுக்குச் சென்றுவிடலாம்.

சிக்கன், மீன் போன்றவற்றைச் சாப்பிடுவதால் எலும்பு, முள் போன்றவை குத்தி இந்த பலூன் உடைந்துவிடுமா? ஆல்கஹால் குடித்தால் வெடித்துவிடுமா?

  • இது நாம் ஊதும் சாதாரண ரப்பர் பலூன் அல்ல ;சிலிக்கான் மூலமாகத் தயாரிக்கப்படும் பலூன். ஊசியே கொண்டுபோய் குத்தினாலும் இது உடையாது. ஏனெனில் இது தடிமனான மூலக்கூறுகளால் தயாரிக்கப்பட்ட து.
  • சாதாரணமாகச் சாப்பிடும் உணவுகளால் இந்த பலூனிற்கு எந்தச் சேதாரமும் ஏற்படாது.
  • எந்தச் சிக்கலும் இல்லாத பாதுகாப்பானது.
  • பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, பல்வேறு சோதனைகளுக்குப் பிறகே இந்தச் சிகிச்சை நடைமுறைக்கு வந்துள்ளது.

ஜெம் உடல் பருமன் மற்றும் நீரிழிவுப் பிரிவில், டயட் தெரபியில் தொடங்கி, உடற்பயிற்சி, ஜிம், மெடிடேஷன், பலூன் தெரபி,
பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை வரை அறிவியல் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட நடை முறைகளிலேயே உடல் பருமனுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.!!