Can cancer be cured without the removal of Uterus?

கர்ப்பப்பையின் உள்சவ்விலிருந்து வரும் புற்றுநோயே ‘என்டடோமெட்ரியல் கேன்சர் ‘ – அதாவது கர்ப்பப்பை புற்றுநோய் எனப்படுகிறது.உலகளவில் பெண்களுக்கு ஏற்படும்
புற்றுநோய்களில் கர்ப்பப்பை புற்றுநோய் நான்காம் இடத்தில் இருக்கிறது.கரப்பப்பையின் உட்சுவரானது ‘எண்டோமெட்ரியம்’ எனப்படும். இந்த செல்கள் அளவுக்கு அதிகமாக, கட்டுப்படுத்த இயலாத நிலையில் அதிகரிக்கும்போ து கர்ப்பப்பை புற்றுநோய்
உருவாகிறது.

அறிகுறிகள் என்னென்ன?

  • மாதவிலக்கு நின்ற பிறகும் ஏற்படும் உதிரப்போக்கு (Post menopausal bleeding)
  • மாதவிலக்கு நாட்களில் அளவுக்கு அதிகமான உதிரப்போக்கு ஏற்படுதல் (Abnormal uterine bleeding)
  • மாதவிலக்கு அல்லா த நாட்களிலும் உதிரப்போக்கு ஏற்படுதல் (Non cyclical spotting bleeding)

    பரிசோதனை முறைகள் எவை?

    • அல்ட்ரா சவுண்டு ஸ்கே ன் (Ultrasound)
    • ட்ரான்ஸ் வெஜைனல் ஸ்கேன் (Trans vaginal USG scan)
    • எம்.ஆர்.ஐ. ஸ்கேன் (MRI scan)
    • கர்ப்பப்பை உள்சவ்வு திசு பரிசோதனை (Endometrial biopsy)

    அபாயக்காரணிகள் என்னென்ன?

    • கர்ப்பப்பை உள் சவ் வு தடிமனாக இருத்தல் (Thickened endometrium/endometrial hyperplasia)
    • மிகச்சிறிய வயதிலேயே பூப்படைதல் (10 வயதுக்கு முன்னதாகவே )
    • 52 வயது தாண்டியும் தொடர்ச்சியாக மாத விலக்கு ஏற்படுதல்
    • மரபணு மாற்றங்கள், உடல் பருமன்
    • குழந்தையின்மை
    • ரத்தக் கொதிப்பு, நீரிழிவு உள்ளவர்கள்
    • பூப்படைந்த முதலிருந்தே தொடர்ச்சியாக பல வருடங்கள் மாதவிலக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே ஏற்படுதல் (Chronic anovulation)

    புற்றுநோயின் நிலைகள் :

    Stages of Cancer
    • Stage 1 (முதல்நிலை )
      • கர்ப்பப்பையில் மட்டும் புற்றுநோய் செல்கள் இருத்தல்
      • அறுவை சிகிச்சை மட்டுமே போதுமானது
    • Stage 2 (இரண்டாம்நிலை )
      • கர்ப்பப்பை வாய்ப்பகுதியிலும் பரவியிருத்தல்
      • அறுவை சிகிச்சை செய்த பிறகு கதிர்வீச்சு / கீமோதெரபி கொடுக்கப்படும்.
    • Stage 3 (மூன்றாம் நிலை )
      • யோனி பாகம், சினைப்பை மற்றும் நெறிகட் டிகளில் பரவியிருத்தல்
      • கதிர்வீச்சு/கீமோதெரபி கொடுத்து, பிறகு அறுவை சிகிச்சையும் , மீண்டும் கதிர்வீச்சு / கீமோதெரபி கொடுக்கப்படும்.
    • Stage 4 (நான்காம் நிலை )
      • சிறுநீர்ப்பை , மலக்குடல், நுரையீரல், எலும்பு போன்ற உடலின் அனைத்து முக்கிய பாகங்களிலும் பரவுதல்
      • கதிர்வீச்சு / கீமோதெரபி மட்டுமே கொடுக்கப்படும்.

    ஆரம்ப கட்டத்திலேயே பிரச்சனைகளைக்
    கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை பெற்று கொள்ளவது மிகவும் அவசியம்
    !!!!!!