Is Jaundice a Symptom of Pancreatic Cancer?

கணையம் என்றால் என்ன?

கணையம் நமது வயிற்றுப் பகுதியின் அடியில் பின்புறமாக இருக்கிறது. கணையம் முக்கியமாக இரண்டு வேலைகளை செய்கிறது. முதல் வேலை இன்சுலின் சுரப்பு. இன்சுலின்தான் உடலில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது. கணையத்தின் இரண்டாவது முக்கியமான வேலை ஜீரணத்திற்கு உதவக்கூடிய
நொதியைச் (என்ஸைம்ஸ்) சுரப்பது. அதுவே நாம் சாப்பிடக்கூடிய உணவில் கலந்து நமது ஜீரணத்துக்கு உதவுகிறது.

முக்கியமான இந்த இரண்டு வேலைகளைச் செய்யக் கூடிய கணையத்தில் நோய் ஏற்பட இரண்டு முக்கியக் காரணங்கள் :

  1. மதுப்பழக்கம் (மது அருந்துவதால் கணையம் அலர்ஜியாகிக் கெட்டுப் போவதற்கான அபாயம் இருக்கிறது).
  2. பித்தப்பையில் ஏற்படக்கூடிய கற்கள் கணையத்தை அடைத்து, அதனால் பிரச்சனை வரலாம்.

அறிகுறிகள் என்னென்ன?

  • பசியின்மை
  • மஞ்சள் காமாலை
  • உடல் எடை குறைதல்
  • புதிதாக சர்க்கரை நோய் வருபவர்களுக்கு
  • சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு அது இன்னும் அதிகமாகி இன்சுலின் போடுகிற அளவுக்கு வளர்ந்து நிற்பது.

கணையப் புற்றுநோயை தடுக்கும் முறைகள் :

அதைத் தடுக்கும் முறைகளான மதுப்பழக்கம், புகைப்பழக்கத்தைத் தவிர்ப்பதை தொடர்ந்து செய்ய வேண்டும். அதோடு, ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, பித்தப்பை கற்கள் போன்றவை வராமல் தடுத்தால் கணையத்தில் வரக்கூடிய புற்றுநோய்களைத் தவிர்க்கலாம். மஞ்சள் காமாலை போன்ற சில அறிகுறிகள்தோன்றும் பட்சத்தில் அது கணையப் புற்றுநோயாக இருக்குமோ என்ற சந்தேகத்தைத் தெளிவுபடுத்துவது மிகவும் அவசியம்.

கணையப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நமக்கு
மிக மிக அவசியம்.