How to prevent growth of Colon Polyps?

பெருங்குடல் பாலிப்கள் என்பது பெருங்குடலின் உட்புறத்தில் உருவாகும் சிறிய வளர்ச்சியாகும். பாலிப்கள் மிகவும் பொதுவானவை. 50 வயது தாண்டியவர்களில் பாதி பேர் அல்லது மூன்றில் ஒரு பங்கினருக்கு அவை உள்ளன. சில பாலிப்கள் மட்டும் புற்றுநோயாக இருக்கலாம் அல்லது அப்படி மாறலாம்.

பெருங்குடல் பாலிப்களை கண்டறிய உதவும் மருத்துவ கருவிகள் :

  • கொலொனோஸ்கோபி (Colonoscopy).
  • அடிவயிற்றின் CT ஸ்கேன் (CT Scan)
  • மலச்சோதனை

பெருங்குடல் பாலிப்களின் அறிகுறிகள் :

  1. மலத்தில் ரத்தப்போக்கு
  2. மலச்சிக்கல்
  3. ரத்தச்சோகை
  4. சில நேரங்களில் சோர்வு

பெருங்குடல் பாலிப்களைத் தடுக்க முடியுமா?

பாலிப்ஸ் அல்லது பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?

  • பருமனாக இருந்தால் , எடையைக் குறைக்கவும்
  • புகைப் பிடிக்காதீர்க ள்
  • மது அருந்துபவராக இருந்தால் , மது அளவைக் கட்டுக்குள் வையுங்கள்.
  • கொழுப்பு குறைவாக உணவை உண்ணுங்கள்.

பாலிப்ஸ் அல்லது பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான அபாயங்களைக் குறைக்க கொழுப்பு குறைவான உணவுகள் மற்றும் பழங்கள், காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ள உணவை உண்ணுங்கள்.