Can Ovarian cyst turn into cancer?

சினைப்பை கட்டிகள் (Ovarian cyst) என்பது சினைப்பையினுள் உண்டாகக்கூடிய திரவம் நிறைந்த பை போன்ற நீர்க்கட்டிகளாகும். இவை பெரும்பாலும் அனைத்து வயதினரிடமும் காணப்படுகின்றன. சிலருக்கு இயல்பாகவே சினைப்பையில் நீர்க்கட்டிகள் காணப்படும் (Functional cyst).

சினைப்பை கட்டிகளின் வகைகள் :

  • சாதாரண நீர்க்கட் டிகள் (Simple cyst).
  • ரத்தக் கட் டிகள் (Haemorrhgic cyst)
  • எண்டோமெட்ரியாட்டிக் கட்டிகள், சாக்லேட் கட்டிகள் (Endometriotic cyst or chocolate cyst)
  • டெர்மாய்டு கட்டிகள் (Dermoid cyst)
  • புற்றுநோய் கட்டிகள் (malignant ovarian cyst)

சினைப்பை கட்டிகளின் அறிகுறிகள் :

பெரும்பாலும் சினைப்பை கட்டிகள் எந்தவிதமான தொந்தரவும் தராமல் வளர்ந்துகொண்டே இருக்கும். சில பெண்களுக்கு பின்வரும் அறிகுறிகள் காணப்படும்.

  1. மிகுந்த வயிற்று வலியுடன் கூடிய குமட்டல் மற்றும் வாந்தி
  2. இடுப்பு வலி
  3. வயிற்று வீக்கம்
  4. சீரற்ற மாதவிடாய் சுழற்சி
  5. சிறுநீர் பிரச்சனைகள்

மாதவிடாய் நிற்கும் காலத்திற்கு முன்பு உள்ள  பெண்களில் (Perimenopausal) 8 சதவிகிதமும், மாதவிடாய் முடிந்த நிலையில் உள்ள பெண்களில் (Postmenopausal) 16 சதவிகிதமும், பெரிய அளவிலான சினைப்பை கட்டிகள் காணப்படுகின்றன.

சில நேரங்களில் சினைப்பை கட்டியானது உடைந்து அல்லது சுழன்று அடிவயிற்றில் திடீரென மிகுந்த வலி ஏற்படுதல் போன்ற தீவிரமான அறிகுறிகளும் சினைப்பை கட்டிகளில் ஏற்படும்.

மூன்றே துளைகளில் முழுமையான சிகிச்சை !

பெரும்பாலான சினைப்பை கட்டிகள் எ ந்தப்பாதிப்பையும் ஏற்படுத்தாது. நாளடைவில் தானாகவே மறைந்துவிடும். சில நேரங்களில் மிக நீண்ட நாட்களாக இருக்கும் கட் டிகள் புற்றுநோயாக மாறக்கூடும். அதனால் மருத்துவர் ஆலோசனையுடன் 3-6 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்வது அவசியம். அவ்வாறு பரிசோதனை செய்துகொள்ளும் போது கட்டிகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டாலோ , அளவில் பெரியதாக வளர்ந்தாலோ மகளிர் நல மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு அதற்கான அறுவை சிகிச்சைகள் தேவைப்படலாம்.

நுண்துளைகளின் மூலமே அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் வயிற்றில் தழும்புகள் ஏற்படுவதில்லை .

அறுவை சிகிச்சை செய்த தழும்புகளின் மீது ஏற்படும் குடலிறக்கமும் முழுவதுமாகத் தவிர்க்கப்படுகிறது.